அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்


ஆத்துப்பட்டி பிரிவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஆத்துப்பட்டி பிரிவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். திருச்சி மாவட்டம், முசிறி, மேலசந்த பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா வயது 30. இவர் மே 21 ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் மாவட்டம், பாளையத்திலிருந்து தோகமலை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ஆத்துப்பட்டி பிரிவு ரோடு அருகே செல்லும்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, ராஜா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த ராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராஜாவின் தந்தை கருப்பையா வயது 65 80 அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.


