தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்று கட்சியின்ர்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்று கட்சியின்ர்
கட்சியில் இணைந்தவர்கள் 
நாகையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 20 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துகொண்டனர்
நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இதைப்போல் நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்‌. இதற்கான நிகழ்வு இன்று நாகையில் நடைபெற்றது. அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய பெண்கள் மற்றும் இளைஞர்கள், தமிழக வெற்றி கழக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன் மற்றும் மகளிர் அணி மாவட்ட தலைவி சுகன்யாமுகுந்தன் முன்னிலையில், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Tags

Next Story