சுவாமிமலை அருகே வேளாண்மை துறை சார்பில் கலை நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
கும்பகோணம் வட்டாரத்தின் சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் தேவி கலாவதி உத்தரவு படி கும்பகோணம் வட்டாரம், திப்பிராஜபுரம் கிராமத்தில் கிராமியப் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் கா. அன்பழகன் துவக்கி வைத்தார்கள். ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கும்பகோணம் வட்டார அட்மாகுழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், மாவட்ட திமுக பிரதிநிதி டி .என். கரிகாலன், ஒன்றியகுழு உறுப்பினர் தா. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கலை குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து மானிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு மனதில் புரியும் வகையில் விளக்கமாக எடுத்து கூறினார்கள் .நெல் நுண்ணூட்டம், பயிர் வகை நுண்ணூட்டம், பருத்தி நுண்ணூட்டம், ஜிப்சம், தார்பாய்கள், பண்ணை கருவிகள், பாராம்பரிய நெல். உளுந்து விதைகள்,அசோஸ்பைரில்லம், . சிங் பாக்டீரியா, ரைசோபியம். உயிர் உரங்கள் ஆகிய இடுப்பொருட்கள் 50 சதவீதம் மானிய விலையில் வாங்கி பயன்பெறவும் மற்றும் கோடையில் குறைந்த செலவில்,
குறைந்த தண்ணீரில், குறைந்த நாட்களில் அதிக லாபம் தரக்கூடிய இயல் உளுந்து சோயா பீன்ஸ் சாகுபடி பற்றியும் மண் பரிசோதனை செய்து உர செலவை குறைப்பது பற்றியும், விளைபொருள்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வது பற்றியும் , கலைநிகழ்ச்சி மூலம் விளக்கி கூறப்பட்டது.
முன்னதாக வட்டார துணை வேளாண்மை அலுவலர் சாரதி, வரவேற்று பேசினார் .நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாயிகள், திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ் உதவி தொழில்நுட்ப மேலாளர் தனசேகரன் இளமதி, உதவி வேளாண்மை அலுவலர் அலெக்சாண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.,,