மலைக்கோவில் படிகட்டுகளை சீரமைக்க முயற்சி
பூஜையில் கலந்து கொண்டவர்கள்
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், இளைப்பாற்றி மண்டபத்திலிருந்து இறங்கி வரும் போது அங்குள்ள படிகட்டுகள் குறுகலாகவும், ஒழுங்கற்றும், நடப்பதற்கு மிகவும் சிரமமாகவும் இருந்து வந்ததை கருத்தில் கொண்டு உபயதாரர் திரு.N.P.வேலு திருக்கோயில் அலுவலகத்தில்,
அணுகி நடப்பதற்கு ஏதுவாக படிகட்டுகளை அமைத்து தருவதாக கூறியதின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை பொறியாளரால் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செ.தங்கமுத்து மற்றும் அறங்காவலர்கள் செ.ர.கார்த்திகேயன், பி.அர்ஜீனன், மோ.அருணா சங்கர்
டி.சி.பிரபாகரன் ஆகியோர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையான அனுமதி வழங்கப்பட்டு உபயதாரர் மற்றும் அறங்காவலர் தலைவர் மற்றம் அறங்காவலர்கள், உதவி ஆணையர்/செயல் அலுவலர் திரு.மு.இரமணிகாந்தன், மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டு பணி துவங்கப்பட்டது.