நாமக்கல் அருகே நாளை விஏஓ அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆலோசனை கூட்டம்
நாளை VAO அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ! -சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அறிவிப்பு நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் வலையப்பட்டி , புதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அமையவிருக்கும் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் சிப்காட் எதிர்ப்பு இயக்க அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 52 ஆவது அறப்போராட்டமாக வளையப்பட்டி புதுப்பட்டி அரூர் ஆகிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைவதை தவிர்க்க வலியுறுத்தி,
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (11.02.2024) அரூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.