திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது

ஏலச்சீட்டு 

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 50 லட்சம் மோசடி செய்த தம்பதியினரை மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

திருப்பூர் போயம்பாளையம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 48).இவருடைய மனைவி சாந்தி (38). இவர்கள் போயம்பாளையத்தில் குடியிருந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தவணைத்தொகையை செலுத்தி வந்தனர். 60-க்கும் மேற்பட்டவர்கள் ரூ. 50 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு முதிர்வு தொகையை கொடுக்காமல் தம்பதி இழுத்தடித்து வந்துள்ளது. பணம் செலுத்தியவர்கள் அவர்களின் வீட்டுக்குச் சென்று கேட்டுள்ளனர். இந்த நிலையில் இருவரும் தலைமறைவானார்கள்.இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபுவிடம் மனு கொடுத்தனர்.

கமிஷனர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தர்மணி மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் மூர்த்தி-சாந்தி தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story