வீட்டுக்கு மின் இணைப்பின்றி குழந்தைகளுடன் தவிக்கும் ஆட்டோ டிரைவர்
பலமுறை மனு கொடுத்தும் மின் இணைப்பு கிடைக்காமல் குழந்தைகளுடன் அவதிப்படுவதாக விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் சத்தியன் (வயது 36), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது மனைவி, குழந்தைக ளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 2009-ம் ஆண்டு சாலாமேடு விநாயகா நகர் பகுதியில் வீடு கட்டி கடந்த 2015-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். கடந்த 9 ஆண்டுகளாக பலமுறை தனது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு 20-க்கும் மேற்பட்ட மனுக்களை மின்சாரத்துறை, பதிவுத் துறை, நகராட்சி துறை ஆகிய துறைக்கு மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மின்சாரம் இல்லாத காரணத்தால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் எனது 4 குழந்தைகளும் பாடப்புத்தகங்களை படித்து வருகின்றனர். மின்வி ளக்கு வசதி இல்லாத காரணத்தால் பாம்பு, தேள், பூரான் உள் ளிட்ட விஷ ஜந்துக்கள் எங்கள் வீட்டின் உள்ளே வருவதால் மிக வும் அச்சமாக இருக்கிறது. இந்த அவலநிலை குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. ஆகவே மின் இணைப்பு வழங்க நடவ டிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, சம்பந்தப்பட்ட மின்வா ரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.