வெள்ளகோவிலில்  தமிழக அரசின் நலத்திட்டத்திற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவிலில்  மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அரசின் நலத்திட்டத்திற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அரசின் நலத்திட்டத்திற்கான விழிப்புணர்வு முகாம் இன்று வெள்ளகோவிலில் மக்கள் மாமன்றம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மக்கள் மாமன்றம் செயலாளர் மதி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கம் திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசிடம் இருந்து சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவது குறித்து விளக்கம் கொடுத்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தின் புதிய கிளை வெள்ளகோவிலில் இன்று துவக்கப்பட்டது இதில் கவிஞர்ஆதி தலைவராகவும் செயலாளராக கு.கோகுல் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் மன்ற தலைவர் சண்முகம் நன்றியுரை விழா இனிதாக நிறைவேற்றது.

Tags

Next Story