போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

மல்லசமுத்திரத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மல்லசமுத்திரத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று, சேலம் டாக்.டி.வி.எஸ்.,ரேவதி கலைக்குழு சார்பாக, கள்ளச்சாரயம், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை, சிகரெட் உள்ளிட்டவற்றை விற்க கூடாது. மாணவர்களை பெற்றோர்கள் காண்காணிக்க வேண்டும். மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துக்கூறி, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வினை கலை நிகழ்சியின் மூலம் ஏற்படுத்தினர். கலைக்குழுவை சேர்ந்த ரேவதி, மணிகண்டன், வெள்ளிங்கிரி, அமுதா உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story


