திருப்பூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்
விழிப்புணர்வு நாடகம்
திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
திருப்பூரில் மாநகர காவல் துறையின் சார்பில் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வாகன விபத்தினால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகர காவல் துறை மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில் விபத்துகளை தடுக்கும் விதமாக ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா நிகழ்த்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் சார்பில் நிகழ்த்தப்பட்டது இதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கக் கூடாது இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட்டை அணிய வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டினார்.அதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு ஆயுதப்படையின் கூடுதல் உதவி ஆணையர். மனோகரன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார் மேலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர்.சரவணன், போக்குவரத்து உதவி ஆய்வாளர்.முருகன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story