நாகையில் போஷான் பக்வாடா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் போஷன் அபியான் சார்பாக போஷான் பக்வாடா குறித்த மாவட்ட அளவிலான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் போஷன் பக்வாடா என்ற ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் போஷான் அபியான் "போஷன் பக்வாடா 2024" ஊட்டச்சத்து குறித்து இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
09.03.2024 முதல் 23.03.2024 வரை நடக்கும் இருவார ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சினை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இத்திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் முன்பருவ கல்விக்கு பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்பொழுது பிரச்சாரத்தின் மூலம் ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவ கல்வி குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. மேலும் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கவேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவு குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாகும்.
இரண்டு வயதுக்கு மேற்ப்பட்ட அருகில் உள்ள குழந்தைகள் மையங்களில் சேர்த்து ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவ கல்வியை அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்(பொ) கி.திவ்யபிரபா, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) திரு.முருகேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் .எழிலரசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட உதவியாளர்,
மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.