செய்யாறில் விசிகவினர் துண்டறிக்கை வழங்கும் விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி
செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு துண்டறிக்கை வழங்கும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு துண்டறிக்கை வழங்கும் விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் வெம்பாக்கம் மதியழகன் தலைமை தாங்கினார்.
மண்டல செயலாளர் செல்வம் பேரணியை துவக்கி வைத்தார். காந்தி சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பு அடுத்த ஆரணி கூட்டு சாலை உள்ள அம்பேத்கர் சிலையைஅடைந்தது. பின்னர் அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணி முடித்துக் கொள்ளப்பட்டது. பேரணியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் இடி மின்னல் இனியவன், விசிக நகர துணை செயலர் அருண், நகர இணை செயலாளர் லோகு, பூபாலன், கோபி கண்ணன்,
பன்னீர்செல்வம்,சுதாகர் ,சசிகுமார்,ஐயப்பன்,விஜய்சங்கர்,பாஸ்கரன்,மாறன், செல்வம் உள்ளிட்ட விசிக ஒன்றிய,நகர, மாவட்டநிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். சா
லையோர கடைகளிலும், பேருந்துகளில் பயணிப்பவர்களிடமும் துண்டறிக்கை வழங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.பேரணியில் திரளானோர் பங்கேற்று பதாகைகள்,கொடிகள் ஏந்தி ஒரு குழுவாகவும் பேண்ட் வாத்தியம் குழுவினர் உள்ளிட்ட இரண்டு குழுக்களாக பேரணி சென்றது.