சைபர் கிரைம் சார்பில் சைபர் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலம்

சைபர் கிரைம் சார்பில் சைபர் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலம்

 சைபர் குற்றங்கள் குறித்து ஊர்வலம் 

தேனி மாவட்டத்தில் சைபர் கிரைம் சார்பில் சைபர் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி மாவட்ட காவல்துறை சைபர்கிரைம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தினை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் . இந்த ஊர்வலமானதுபழனிசெட்டிபட்டியில் தொடங்கி நேரு சிலை பழைய பேருந்து நிலையம் பங்களா மேடு வரை ஊர்வலம் சென்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் வங்கி மோசடிகளை எப்படி தடுப்பது என்பது குறித்தும், செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி பண மோசடிகளை தடுப்பது குறித்தும் , SMS OTP குற்றங்களை தடுப்பதை குறித்தும் , போலி முகநூல் மோசடி குறித்தும் ,குறைந்த விலையில் பொருட்கள் வாங்கி தருவதாக கூறி மோசடியை தடுப்பது குறித்தும்,கேஒய்சி புதுப்பித்து தருவதாக கூறி பண மோசடியை தடுப்பது குறித்தும், லோன் பெற்று தருவதாக கூறி பணம் மோசடிகள் தடுப்பது குறித்தும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் மோசடி தடுப்பது குறித்தும் உட்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் உதவி காவல் ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தேனி தொழிற் பயிற்சி மையத்தின் முதல்வர் சேகரன், தேனி தொழிற் பயிற்சி மையத்தின் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story