அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க விழிப்புணர்வு பேரணி

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மலைக்கோவிலூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள், பள்ளி ஆசிரியர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மலைக்கோவிலூர் நடுநிலைப் பள்ளியில் இருந்து பேருந்து நிறுத்தம் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர். பேரணியின் போது, அரசு பள்ளியில் சேரும் மாணாக்கர்களுக்கு, எண்ணும் எழுத்தும், காலை உணவு திட்டம், தொழில் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், தேன் சிட்டு திட்டம், வினாடி வினா போட்டிகள், சிரார் திரைப்பட விழாக்கள், இலக்கிய மன்ற செயல்பாடுகள், வானவில் மன்றம், கலைத் திருவிழா, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா, இல்லம் தேடி கல்வித் திட்டம்,நான் முதல்வன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என தனி சிறப்பு பயிலரங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி சென்றனர்.

Tags

Next Story