சிவகாசியில் ஸ்டேஷனரி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து...

சிவகாசியில் ஸ்டேஷனரி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து...

தீ விபத்து

சிவகாசியில் ஸ்டேஷனரி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசியில் ஸ்டேஷனரி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கிருஷ்ணமூர்த்தி என்பதற்கு சொந்தமான லாமா & கோ என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை இயங்கி வருகிறது.இது பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.இன்று அதிகாலை குடோனில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவல் பேரில் நிலைய அலுவலர் வெங்டேஷன் தலைமையில் சம்பவத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரியும் தீயை அணைத்தனர்.அதனால் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.இந்த தீ விபத்தில் பல லட்ச மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.மேலும் இது குறித்து உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story