தனியாக வசித்துவந்த மூதாட்டி தற்கொலை
கோவில்பட்டி அருகே தனியாக வசித்துவந்த மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம், 4ஆம் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (80). இவரது கணவா் 25 ஆண்டுகளுக்கு முன்பும், மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்துவிட்டனா். இதனால், தனியாக வசித்துவந்த ராஜம்மாள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது மகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி வந்து தாயைப் பாா்த்துச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது பதிலில்லையாம். இதனால், சந்தேகமடைந்த மகள், உறவினருக்கு தகவல் தெரிவித்து, தனது தாயைப் பாா்த்து வரும்படிக் கூறினாராம். அந்த உறவினா் சென்று பாா்த்தபோது, ராஜம்மாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்ததாம். தகவலின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வருகின்றனர்.
Next Story