வீட்டின் கதவை உடைத்த யானை; நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தம்பதியினர்!
கோவை தடாகம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வீட்டுக்குள் புகுந்த யானைகள், கதவை தட்டிய நிலையில், அங்கிருந்த தம்பதிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
கோவை: தடாகம் பன்னிமடை அடுத்த தாளியூர் பகுதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் குமார்-தங்கமணி தம்பதியினர் எட்டு வயது மகனுடன் வசித்து வருகின்றனர்.இவர்களது வீட்டின் அருகிலேயே ராஜேஷ்வரி என்ற மூதாட்டியும் வசித்து வரும் நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய தாய் மற்றும் குட்டி யானை தாளியூர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது. நடராஜ் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த உணவு பொருட்களை சாப்பிட்ட நிலையில் அருகில் உள்ள பழனிச்சாமியின் தோட்டத்திற்குள் புகுந்து குமாரின் வீட்டு கதவை உடைக்க முயற்சி செய்துள்ளது.கணவன் மனைவி இருவரும் கதவை உட்புறமாக தாழிட்டு கதவுகளை தாங்கி பிடித்தபடி சத்தம் போட்டுள்ளனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள மூதாட்டியின் வீட்டின் அருகே யானைகள் சென்றதால் தம்பதியினர் மகனை அழைத்து கொண்டு பழனிச்சாமியின் வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.யானையிடம் இருந்து தங்களை காப்பாற்ற முயன்றபோது குமாருக்கு கையில் எழும்பு முறிவும் அவரது மனைவி தங்கமணிக்கு காலில் காயம் ஏறட்ட நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் இருவரையும் மீட்டு பொதுமக்கள் உதவியுடன் சிகிச்சைக்காக அழைத்து செல்லபட்ட பின்னர் அங்கு சுற்றி திருந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் தற்போது இங்கு சுற்றி திரியும் இந்த யானைகள் அரிசியை மட்டுமே குறிவைத்து வீடுகளில் நுழைவதாகவும் தினமும் வீடுகளின் கதவுகளை உடைப்பது தொடர்கதையாகி விட்டாதாக கூறினர்.வனத்துறையினர் விவசாய பயிர்களை காப்பதோடு தங்களின் உயிர்களை காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர்கள் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினால் மட்டுமே அச்சமின்றி வாழ முடியும் என தெரிவித்தனர்.