சாலையில் யானை உலா; வனத்துறை எச்சரிக்கை !
ஊட்டியில் இருந்து மாயார் பகுதிக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை, காட்டு யானை வழிமறித்தது.
ஊட்டியில் கடந்த சில நாட்களாக மலைப்பாதையில் அவ்வப்போது காட்டு யானைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் , பகல் நேரங்களில் நிலவிவரும் கடும் வெயில் மற்றும் இரவு நேரங்களில் நிலவி வரும் நீர்பனியின் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் ஊட்டியில் இருந்து மாயார் பகுதிக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை ஒற்றை காட்டு யானை நேற்று வழிமறித்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்த நிலையில் சிறிது நேரம் சாலையில் நின்ற காட்டு யானை, பின்னர் சாலையோரம் சென்றதால் பேருந்தில் பயடித்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். கடந்த சில நாட்களாக மலைப்பாதையில் அவ்வப்போது காட்டு யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story