ஆரணி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்டவர்

ஆரணி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குங்குலியர் தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 29), சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் பையூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருண்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story