வெகுமதிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த ஊழியர்

வெகுமதிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த ஊழியர்
இணையவழி மோசடி
தஞ்சாவூரில் வெகுமதி அளிப்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த ஆன்லைன் மோசடி குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த 54 வயதான நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அரசு வங்கி ஒன்றின் கணக்கை முறையாக பராமரித்ததால் வெகுமதி புள்ளி வந்துள்ளது. எனவே அதனை நீங்கள் பணமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் குறுஞ்செய்தியின் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உங்களது சுயவிவரம், வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என இருந்தது. இதை எடுத்து அந்த லிங்கை பதிவு செய்து பார்த்தபோது ஒரு வலைதள பக்கத்திற்கு சென்றது.

அதில் சுய விவரங்கள் மற்ற இதர வங்கி விவரங்களை பதிவு செய்தவுடன் உள்நுழையும் விருப்பத்தேர்வு இருந்தது. அதை கிளிக் செய்தவுடன் அவரது செல்ஃபோன் எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் வந்தது. அந்த கடவுச்சொல்லை அவர் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருடைய வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 50,000 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தஞ்சாவூர் இணையதள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் ஆய்வாளர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story