பெட்டிக்கடை நடத்தி வந்த ஊழியர் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இதே கிராமத்தை சேர்ந்த மகி என்பவருக்கு சொந்தமான மர எண்ணய் செக்கு தயாரிக்கும் கடையில் கடந்த நான்கு மாத காலமாக பணிபுரிந்து வருகிறார் . இந்தநிலையில் இந்த மர எண்ணைய் தயாரிக்கும் கடைக்கு அருகாமையில் உள்ள மற்றொரு கடையில் பெட்டிக்கடை வைத்தும் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் செல்வம் இவரது மனைவி அமலா அவர்கள் வீட்டில் இல்ல சுப நிகழ்ச்சிக்காக இரு தினங்கள் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.
சுப நிகழ்ச்சி முடிந்த பின்பு மீண்டும் செல்வம் கடைகளைத் திறக்க வந்துள்ளார். அப்பொழுது கடையின் உரிமையாளர் மகி மற்றும் உறவினர்களான குமார் குருசாமி ஆகியோர் செல்வம் கடை திறக்கமால் சாலையில் நிற்க வைத்து அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளனர். மேலும் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனவும் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலை அடைந்த செல்வம் வீட்டிற்குச் சென்று மனைவி அமலாவிடம் நடந்ததை கூறியுள்ளார் . இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த செல்வம் இவருக்கு நடந்ததை கடிதம் மூலம் எழுதி வைத்து செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
கடிதத்தை கைப்பற்றிய உறவினர்கள் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தற்கொலைக்கு காரணமாக இருந்த மகி குருசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் இந்த தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த குமார் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள குமாரை கைது செய்ய வேண்டும் என செல்வத்தின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மரச்செக்கு எண்ணெய் கடையில் பணியாற்றிக் கொண்டு பெட்டி கடை வைத்து செல்வம் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பெட்டி கடையில் செல்வத்திற்கு நல்ல வருமானம் வந்துள்ளது. இதனைப் பார்த்த உரிமையாளர்கள் நாங்கள் அனுமதி கொடுத்து தான் அந்த இடத்தில் பெட்டிக்கடை வைத்தாய், நீ நிறைய சம்பாதிக்கிறாய் என பொறாமையில் அவருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தான் கடையை திறக்க விடாமல் அன்று அவரை வாசலிலே நிற்க வைத்து அவமானம் செய்துள்ளனர். இதனாலே செல்வம் தற்கொலை செய்து கொண்டார் என உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.