குடிநீர் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி
வாக்கு சேகரித்த வேட்பாளர்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பட்டூர். எதுமலை, வலையூர். ஓமாந்தூர், திருவெள்ளறை பூனாம்பாளையம், அய்யம்பாளையம், திருப்பைஞ்சீலி,கிளியநல்லூர் உள்ளிட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம். டி.சந்திரமோகன், வடக்கு மாவட்டச் செயலாளரும்,
முன்னாள் அமைச்சரு மான மு.பரஞ்ஜோதி தலைமையில் வீதி, வீதியாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச்கூறி இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பொதுமக்களிடம் பேசியாவதுதாவது, எம்.பி.பதவி சாதாரண பதவி அல்ல. மிக உயர்ந்த பதவி. நான் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன்.
இந்தப் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வர முடியும். இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை தலையாய பிரச்சனையாக உள்ளது. விவசாயிகளுக்கு நீர்ப் பாசனம் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை எளிதில் செய்து கொடுக்க இயலும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து உங்களுக்கு உழைக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என பேசினார். இந்த பிரச்சாரத்தில் அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி மா.ராசு.முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி, மாணவரணி மாவட்ட செயலாளர் டி.அறிவழகண்,
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ்., ஒன்றிய கழக செயலாளர்கள் டி.ஜெயக்கு மார், ஆதாலி, ஆமூர் எஸ். ஜெயராமன், பேரூராட்சிக் கழக செயலாளர்கள் துரை. சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்