மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவன் தற்கொலை

மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவன் தற்கொலை

பைல் படம் 

திருவாரூரில் மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவன் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட திருமஞ்சன வீதி பகுதியை சேர்ந்தவர் செல்வ வள்ளியப்பன். இவர் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் சிவகாமி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story