வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் வந்த சுயேச்சை வேட்பாளர்

நாமக்கல்லில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் நிறைவு நாளான இன்று, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல்லில் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் நிறைவு நாளான இன்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவரது சொந்த ஊரான நல்லிபாளையத்தில் இருந்து நாட்டு மாடுகளை வண்டியில் பூட்டி ஊர்வலமாக வந்தார். மேள தாளம் முழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்ட சுயேட்சை வேட்பாளர் சதிசை 100 மீட்டர் முன்பே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேட்பாளருடன் குறிப்பிட்ட சிலரை மட்டும் காவல்துறையினர் அனுமதித்தனர் பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் என்று முழு வீச்சில் நடைபெற்று நிறைவு பெற்றது. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் இன்று என்பதால் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். இதில் நாமக்கல்லில் உள்ள கொங்கு இளைஞர் அணி சார்பில் அதன் மாவட்ட அமைப்பாளர் சதீஷ் என்ற வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுவை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலர் உமாவிடம் தாக்கல் செய்தார்.

Tags

Next Story