விபத்து பகுதியில் இரும்பு டிவைடர் அமைக்கப்பட்டது

விபத்து பகுதியில் இரும்பு டிவைடர் அமைக்கப்பட்டது

இரும்பு டிவைடர் 

விபத்து அதிகம் நடைபெறும் பள்ளிப்பாளையம் அடுத்துள்ள பிள்ளையார் காட்டூர் என்ற பகுதி அருகே இரும்பு டிவைடர் வைக்கப்பட்டது.
பள்ளிபாளையம் சங்ககிரியை இணைக்கும் முக்கிய சாலையாக வெப்படை செல்லும் வழியில், பிள்ளையார் காட்டூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் நகரின் மிக முக்கிய சாலையாக உள்ள இந்த பகுதியில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் .அல்லது வேக தடுப்பு இரும்பு டிவைடர்கள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வந்தது.இந்நிலையில் பள்ளிபாளையம் போலீசார் சார்பில் விபத்து அதிகம் நடைபெறும் இடத்தில் இரும்பு டிவைடர் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story