அ.நா.மங்கலம் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
கிறிஸ்துமஸ் விழா
சேலம் பேளூர் மெயின் ரோடு அ.நா.மங்கலம் மான்போர்ட் நகரில் உள்ள புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடை பெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாரும், தலைமை ஆசிரியருமான அருட்சகோதரர் சகாயராஜ் தலைமை தாங்கி கிறிஸ்துமஸ் என்பது அன்பு பகிர்வு, மன்னிப்பு, நேர்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகளின்படி வாழ்வதாகும் என தெரிவித்தார். தொடர்ந்து அக்ரஹாரம் பங்குத் தந்தை பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத்திருப்பலி நிகழ்ச்சியில் கோனேரிப்பட்டி பங்குத்தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி சிறப்பு மறையுரை ஆற்றி கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கினார். இவ்விழாவில் மாணவ - மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மூலம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வினை செய்து காட்டினர். கோனேரிப்பட்டி உதவி பங்குத்தந்தை பிலவேந்திரம் அடிகளார், அக்ரஹாரம் திருத்தொண்டர் ஸ்டீபன், மூத்த அருட்சகோதரர் இருதய மைக்கேல், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story