இரணியல் அருகே முதியவர் தூக்கிட்டு  தற்கொலை !

இரணியல் அருகே முதியவர் தூக்கிட்டு  தற்கொலை !
தற்கொலை
இரணியல் அருகே கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மிகுந்த வலியில் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரசேரியை சேர்ந்தவர் முருகன் (65). இவரது மனைவி இந்திரா. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் விபத்தில் சிக்கியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டீல் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் முருகன் மிகுந்த வலியில் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மன உளைச்சலுக்கு ஆளான முருகன் வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். வெளியே சென்று விட்டு வந்த முருகன் மனைவி இந்திரா இதை கண்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முருகன் இன்று உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story