அரசு பஸ் மீது மோதி முதியவர் உயிரிழப்பு
முதியவர் பலி
சங்கரன்கோவில் அருகே அரசு பஸ் மீது மோதிய முதியவர் உயிரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிதம்பரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் முருகையா பாண்டியன் கழுகுமலை சாலையில் அரசு குடோன் அருகே சாலையை கடக்கும் முயன்றபோது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்தத சங்கரன்கோவில் டவுன் போலீசார் முதியோர் முருகையா பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story