ஆரணி அருகே கட்டிலில் இருந்து கீழே விழுந்து முதியவர் சாவு
கோப்பு படம்
ஆரணி அருகே கட்டிலில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மேல் சீசமங்கலம் கிராமத்தைசேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 62), ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்.இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போதுதூக்கத்தில் அவர் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்தார். பன்னீர்செல்வத்தை உடனடியாக குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின்னர் அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags
Next Story