பணியின் போது, ஏணியில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு.

சின்னாம்பட்டியில் பணியின் போது ஏணியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சின்னாம்பட்டியில் பணியின் போது ஏணியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சின்னாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் வயது 68. இவரது மனைவி பிச்சையம்மாள் வயது 60. சண்முகம் நவம்பர் 24ஆம் தேதி காலை 10 மணி அளவில், அவரது வீட்டில் மராமத்து வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது,10-அடி உயர ஏணி மீது நின்று பணி செய்து கொண்டிருக்கும் போது, கால் இடறியதால், ஏணியில் இருந்து கீழே விழுந்து முன் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சண்முகம் மனைவி பிச்சையம்மாள் பாலவிடுதி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சண்முகத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.


