சிறுமியை கட்டி வைத்து பாலியல் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோவில் கைது !
கைது
குளச்சல் அருகே சிறுமியை கட்டி வைத்து பாலியல் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (60). கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று காலை இவரது வீட்டின் பக்கத்து தெருவை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி ஒருவர் கடற்கரைக்கு சென்றார். அவருக்கு பின்னால் அவரது 10 வயது மகளும் நடந்து சென்றார். சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையின் பின்னால் சிறுமி நடந்து செல்வதை பார்த்த ஜெயராஜ் சிறுமியிடம் நைசாக பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்று, சிறுமியின் கைகளை துணியால் கட்டி போட்டு பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. உடனே சிறுமி சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் ஜெயராஜன் மனைவி விரைந்து சென்றனர். கையில் கட்டி இருந்த கட்டுகளை ஜெயராஜன் மனைவி அவிழ்த்து, சிறுமியை மீட்டார். இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெயராஜ் மீது போக்சா பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story