அரசு பேருந்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு
காவல் நிலையம்
திண்டுக்கல் மாவட்டம், பெரியநாயக்கன்பட்டி அருகே பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன் வயது 49 . இவர் டிஎன் 58 என் 2237 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் இவர் பணியாற்றும் பேருந்தில், அடையாளம் தெரியாத 70 முதல் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பயணித்துள்ளார். இந்த பேருந்து ஆண்டிப்பட்டி கோட்டை செக்போஸ்ட் அருகே வந்தபோது, இருக்கையில் அமர்ந்து பயணித்த அந்த அடையாளம் தெரியாத பயணி திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு பேருந்திலேயே பயணத்தின் போது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராமன் அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த அடையாளம் தெரியாத முதியவரின் உடலை கைப்பற்றி, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில், இருப்பு வைத்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.