நோயால் அவதிப்பட்ட மூதாட்டி தற்கொலை

நோயால் அவதிப்பட்ட மூதாட்டி தற்கொலை
X

மூதாட்டி தற்கொலை

ஓமலூர் அருகே தீராத நோயால் அவதிப்பட்ட மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த குள்ளம்மாள் 80 வயதான இவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், மனமுடைந்த மூதாட்டி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்பொழுது அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி குள்ளம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தாரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story