திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய் விபத்து ஏற்படும் அபாயம்

திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய் விபத்து ஏற்படும் அபாயம்

மழைநீர் கால்வாயின் மீது, போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப் உடைந்த பகுதியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைநீர் கால்வாயின் மீது, போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப் உடைந்த பகுதியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் இருபுறமும் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயின் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கம், ஜவுளி கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வங்கி, உணவகம் உள்ளிட்டவைக்கு சென்று வரும் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேரடி அருகில், நடைபாதையின் மீது போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப் உடைந்து கால்வாய்க்குள் விழுந்துள்ளது. நடைபாதையில் கவனக் குறைவாக நடந்து செல்லும் பாதசாரிகள், மேய்ச்சலுக்கு சுற்றித்திரியும் கால்நடைகள் திறந்து கிடக்கும் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, மழைநீர் கால்வாயின் மீது, நடைபாதைக்காக போடப்பட்டுள்ள சிமென்ட் சிலாப் உடைந்த பகுதியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."

Tags

Next Story