மூடப்படாத சாக்கடை கால்வாய்

மூடப்படாத சாக்கடை கால்வாய்

வேப்பனஹள்ளி சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை மூடாமல் நெடுஞ்சாலைத்துறையினர் மாதக்கணக்கில் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.


வேப்பனஹள்ளி சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை மூடாமல் நெடுஞ்சாலைத்துறையினர் மாதக்கணக்கில் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.
சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை மூடாமல் மாதக்கணக்கில் கண்டுக்கொள்ளாத நெடுஞ்சாலைத்துறையினர்: விபத்துக்களை தடுக்க சாலையில் பூஜை செய்து தெய்வத்திடம் விண்ணப்பம் வைத்துள்ள மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் தாலுகாவாக சூளகிரி தாலுகா இருந்து வருகிறது.. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சூளகிரி பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலை பகுதியில் கழிவுநீர் கால்வாய் மேற்பகுதி உடைத்து பெரிய அளவிலான குழியாக காணப்படுகிறது.. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சூளகிரிக்கு வேகமாக வரக்கூடிய வாகனங்கள் மூடப்படாத கழிவுநீர் குழியில் விழுந்து விபத்திற்குள்ளாவது அதிகரித்து வருகிறது பல மாதங்களாக நெடுஞ்சாலைத்துறையினர் இதனை கண்டுக்கொள்ளாத நிலையில், அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்க விநோக யுக்தியை கையாண்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.. குழியில் விழுந்து காயம், உயிரிழப்புக்களை அதிகாரிகள் தடுக்காததால் கடவுளே தடுக்க வேண்டுமென சாலையில் பூஜை செய்து கோரிக்கை விடுத்து சென்றுள்ளனர்..

Tags

Next Story