வேலூரில் வேரோடு சாய்ந்து ஆம்புலன்ஸ் மீது விழுந்த மரம்

வேலூரில் வேரோடு சாய்ந்து ஆம்புலன்ஸ் மீது விழுந்த மரம்
மரம் சாய்ந்து சேதமான வாகனம்
வேலூரில் வேரோடு சாய்ந்த மரத்தினால் பொதுமக்கள் மருத்துவமனையினுள் சென்று வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது.

வேலூர் அண்ணாசாலையில் பென்ட்லேண்ட் மருத்துவமனை செல்லும் சாலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை முன்பு வேப்பமரம் ஒன்று இருந்தது. இந்தநிலையில் மழையின் காரணமாக நள்ளிரவில் திடீரென அந்த மரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது.

மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மீது மரக்கிளைகள் விழுந்ததால் அதில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது. இந்தவிபத்தில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

மருத்துவமனையின் நுழைவு வாயிலின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததால் மருத்துவமனைக்குள் செல்வதிலும், உள்ளே இருந்து வெளியே செல்வதிலும் நோயாளிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மருத்துவமனையில் மரம் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story