ஆலங்குளம் அருகே அண்டா திருட்டு:இளைஞா் கைது
ஆலங்குளம் அருகே அண்டா திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூரைச் சோ்ந்த ராணுவ வீரா் சுரேஷ்(27). இவா், அதே பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் அசோக் குமாா் உள்பட 2 போ் கடந்த 29.6.2023இல் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா்.
இந்நிலையில், இவரது வீட்டில் பூட்டை உடைத்து அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை, அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவன் மகன் பிரவீன்குமாா்(28) என்பவா் திருடிச் சென்றாராம்.
இதுகுறித்து, சுரேஷின் சகோதரா் அலெக்ஸ் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீன்குமாரை கைது செய்தனா்.
Tags
Next Story