எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி கோவில் பூமிதி திருவிழா

எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி கோவில் பூமிதி திருவிழா

பூமிதி திருவிழா

எடப்பாடி அடுத்த ஒட்டப்பட்டி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
எடப்பாடி அருகே ஒட்டப்பட்டி அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஒட்டப்பட்டி அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி கோவில் மாசி மாத திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு அபிஷேக பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்று இன்று அதிகாலையில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் செக்கான் குலத்திற்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு சிரபு பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் முதலில் கோவில் பூசாரி பரமானந்த சுவாமி தீ மிதித்த பின்னர் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து அங்காள பரமேஸ்வரி சுவாமியை வழிபட்டுச் சென்றனர். இதனை தொடர்ந்து இன்று சுவாமி திருக்கல்யாணமும் நாளை தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Tags

Next Story