அன்பழகன் நினைவுநாள் - எம்.எல்.ஏ கதிரவன் மரியாதை

அன்பழகன் நினைவுநாள் - எம்.எல்.ஏ கதிரவன் மரியாதை
நினைவஞ்சலி செலுத்திய திமுகவினர் 
திமுக மூத்த தலைவர் அன்பழகனின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு எம்எல்ஏ கதிரவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பேராசிரியர் அன்பழகனின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாத செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூரில் உள்ள அலுவலகத்தில் சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ கதிரவன் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மகன் கே.என். அருண்நேரு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மகன் கே.என். அருண்நேருவை அறிமுகம் செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், அவைத் தலைவர் அம்பிகாவதி, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், இளங்கோவன், வழக்கறிஞர் செந்தில்குமார்,மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story