வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அன்புமணி ராமதாஸ்

சந்தைப்பேட்டை பகுதியில் அன்புமணி ராமதாஸ் மாம்பழம் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இன்று சந்தைப்பேட்டை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடு வீடாக சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி கே மணி தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் . மற்றும் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஐஸ்வர்யம் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் அப்பகுதி முழுவதும் விடுவதாக சென்று பொது மக்களிடையே மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இதில் காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்தி ஏரிகளுக்கு மேற்கொண்டு வருவோம் அப்போதுதான் விவசாயம் செழிப்பாக இருக்கும்.ஜாதி வாரியாக கணக்கெடுப்பு எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்திற்கு சிப்காட் கொண்டு வரப்படும் இன்று பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்து மாம்பழம் தினத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story