நெத்திலி மீன் சீசன் துவக்கம் - கட்டுமர மீனவர்கள் மகிழ்ச்சி !

நெத்திலி மீன் சீசன் துவக்கம் - கட்டுமர மீனவர்கள் மகிழ்ச்சி !
நெத்திலி மீன்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று குளச்சலில் நெத்திலி மீன்கள் கிடைத்ததால் கட்டுமர மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குமரி மாவட்டம் குளச்சலில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, வேள மீன்கள் பிடிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகினர் மீண்டும் மீன் பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். மீன் சீசன் மந்தமானதால் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டாத கட்டுமர மீனவர்கள் இன்று அதிகாலை மீண்டும் கடலுக்கு சென்றனர். அவற்றுள் நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிப்பட்டது. மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். காலையில் ₹.1000 முதல் ₹.1500 க்கு விலைபோன ஒரு குட்டை நெத்திலி மீன்கள் பின்னர் நேரம் செல்ல செல்ல ₹.700 முதல் ₹.1000 வரை விலை போனது. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று குளச்சலில் நெத்திலி மீன்கள் கிடைத்ததால் கட்டுமர மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story