கரை ஒதுங்கிய பழமை வாய்ந்த பைரவர் சிலை - அதிகாரிகள் ஆய்வு.

கரை ஒதுங்கிய பழமை வாய்ந்த பைரவர் சிலை - அதிகாரிகள் ஆய்வு.

பைரவர் சிலையுடன் அதிகாரிகள் 

மரக்காணம் கடலில் கரை ஒதுங்கிய பைரவர் கற்சிலையை வருவாய் துறை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள தீர்த்தவாரி கடற்கரை ஓரம் விடுமுறை நாட்கள் பொது மக்கள் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக குளிப்பது வழக்கம், இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் தீர்த்தவாரி கடற்பகுதிக்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று உள்ளனர். அப்போது மாலை 6 மணியளவில் கடலில் இருந்து திடீரென 2 அடி உயரமுள்ள பழமை வாய்ந்த கருங்கல்லாலான பைரவர் சிலை கரை ஒதுங்கி உள்ளது.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் பார்த்து உள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறை, கடலோர காவல் படை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன், மற்றும் கடலோர காவல்படை காவல் உதவி ஆய்வாளர் சக்தி கணேசன் மற்றும் ஊர் காவல் படை வீரர்கள், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் இருந்து கரை ஒதுங்கிய பைரவர் சிலையை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியது கடலில் ஒதுங்கிய இரண்டு அடி உயரம் உள்ள பைரவர் சிலையை நாங்கள் கைப்பற்றி வைத்துள்ளோம். இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் மட்டுமே இது எந்த நூற்றாண்டின் சிலை என தெரியவரும் என்று கூறினர்.

Tags

Next Story