ரத்தசோகை பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்
மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு இரத்தசோகை பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் ரோட்டரி கிளப் & லைப் கேர் டைக்னோஸ்டிக்ஸ் & மனோ ஆப்டிகல்ஸ் சார்பாக இரத்தசோகை பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரி முதல்வர் ராஜு தலைமையில் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநரும் கல்லூரி செயலாளருமான கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இரத்த சோகையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. கண் பரிசோதனையில் கண்ணாடி தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு மனோ ஆப்டிகல்ஸ் சார்பாக பிரேம் இலவசமாக வழங்கபட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி மகளிர் நலக் குழு ஒருங்கிணைப்பாளர் தேவகி சிறப்பாக செய்திருந்தார்.
Next Story