மயக்க மருந்தியல் வளர்ச்சி திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி!
அலைடு ஹெல்த் சயின்ஸ்
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மயக்க மருந்தியல் பிரிவின் தொழில்துறை சார்பில் சமீபத்திய வளர்ச்சி குறித்த திறன் மேம்பாட்டு விரிவுரை நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மயக்க மருந்தியல் பிரிவின் தொழில்துறை சார்பில் சமீபத்திய வளர்ச்சி குறித்த திறன் மேம்பாட்டு விரிவுரை நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் மயக்க மருந்தியல் பிரிவின் துறைத்தலைவரும், மருத்துவ ஆலோசகருமான டாக்டர் சுப்பிரமணியன் பங்கேற்று மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க பிரிவில் சமீபத்திய தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தார். இதில் துறையின் மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க பிரிவு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மயக்க மருந்தியல் பிரிவின் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி, அறுவை அரங்க பிரிவு பொறுப்பாளர் விக்னேஸ்வரா மற்றும் முத்தமிழ், திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story