அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா
தர்மபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை விழா மாசி மாத அமாவாசை தினத்தில் நேற்று அலங்கரிக்கப்பட்ட ஆலயத்திலிருந்து மயானம் வரை ஊர்வலமாக சென்றது ஊர்வலத்தில் பக்தர்கள் ஆகாய விமானத்தில் தொங்கியவாரு பெண்கள் நீண்டஅலகு குத்தியும் சிறுவர்கள் சிவன், பார்வதி, காளி வேடமணிந்து தாரை தப்பட்டை, கெண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர் பக்தர்கள் அனைவருக்கும் பொதுமக்களால் நீர் மோர் வழங்கப்பட்டது.
பின்னர் மயானம் சென்றடைந்ததும் மயானத்தில் நீண்ட உருவத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியான் டச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது சாமி வந்த சில பக்தர்களுக்கு கோவில் பூஜாரி சாட்டையால் அடித்து பினியை போக்கினார். இந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் ஏராளமான பென் பக்தர்கள் பங்கேற்று அங்காளபரமேஸ்வரி அருள்பெற்றனர்.
நேற்று இரவு 9 மணி அளவில் குமாரசாமிபேட்டை அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோவிலில் இருந்து மின் ஒளி உடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா தர்மபுரி முக்கிய வீதி வழியாக குமாரசாமிபேட்டை விநாயகர் கோவில் வழியாக தர்மபுரி மெயின் ரோடு, பெரியார் சிலை, கடைவீதி ஆகிய வழியாக சாமியா அலங்கரித்து வாகனத்தில் ஊர்வலமாக சென்றது. இதில் தீச்சட்டி ஏந்தி கொண்டு சாமி வேடம் அணிந்து மாரியம்மன் பத்ரகாளி சிவன் பார்வதி நடன நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டுக்களித்தனர்.