அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்
தீர்த்த குட ஊர்வலம்
சேலம், அம்மாபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, அனுக்ஜை, புண்யாகவாஜனம் உள்ளிட்ட பூைஜகள் நடந்தன. தொடர்ந்து காலை 10 மணிக்கு முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மங்கள இசை, பிரவேச பலி மற்றும் முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணிக்கு பல்வேறு பூஜைகள், 2-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் கே.பி.கே.செல்வராஜ் கலந்து கொள்கிறார். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் டாக்டர் சந்திரசேகரன், செயலாளர் கணேசன், பொருளாளர் ஜெகதீசன், துணைத்தலைவர் விஜயமணி, உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.