அங்கன்வாடி மையக் கட்டிடம் சேதம், மாணவர்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே இளையனார்குப்பம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது, இந்த அங்கன்வாடி மையக் கட்டிடம் மேற்கூறையின் ஓடுகள் சிதிலமடைந்து காணப்படுவதால் தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீர் ஒழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என அச்சத்தோடு தினம்தோறும் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வருகின்றனர், அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது, அங்கன்வாடி மையத்தில் மழை பெய்தால் கட்டிடம் சேதம் அடைந்துள்ளதால் கட்டிடத்தின் சுவர் வழியாக மழைநீர் அறையில் தேங்குவதால்,அரிசி,பருப்பு,மாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடைவதால் பொருட்களை மேஜையின் மீது வைத்து பாதுகாத்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள், தற்போது மழைக்காலம் என்பதால் குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி மையக் கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
Next Story