குன்றத்தூர் அருகே அங்கன்வாடி மையமாக மாறிய சமூதாய நலக்கூடம்

குன்றத்தூர் அருகே அங்கன்வாடி மையமாக மாறிய சமூதாய நலக்கூடம்

சமுதாய நலக் கூடம்

குன்றத்தூர் அருகே அங்கன்வாடி மையமாக சமூதாய நலக்கூடம் மாறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, லாரி, கார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இதனால், ஊராட்சிக்கு தொழில் வரி, கட்டட வரி என, ஆண்டிற்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. தவிர, அப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், தங்களின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், பல கோடி மதிப்பில் குளம், ஏரி சீரமைத்தல், சமூதாயம் நலக்கூடம், பொதுக் கழிப்பறை, பூங்கா உள்ளிட்ட ஏராளமான நல திட்டங்களை அமைத்து தந்துள்ளது.

அந்த வகையில், அப்பகுதியினரின் தேவைக்காக, மிக குறைந்த வாடகைக்கு சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில், தனியார் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், 2014 - 15 நிதி ஆண்டில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் இங்கு சமூதாயம் நலக்கூடம் கட்டித் தரப்பட்டது.

Tags

Next Story