கழிவுநீர் கால்வாய் அருகே அங்கன்வாடி மையம்; விஷ ஜந்துக்கள் பீதி

கழிவுநீர் கால்வாய் அருகே அங்கன்வாடி மையம்; விஷ ஜந்துக்கள் பீதி

ஸ்ரீபெரும்துாரில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் அருகில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர்.

ஸ்ரீபெரும்துாரில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் அருகில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்துாரில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் அருகில் பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் குழந்தைகளுக்கு அச்சப்படுகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, வன்னியர் தெருவில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு, 2005ல் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் பழதடைந்ததால், ஓராண்டாக அருகில் உள்ள சுய உதவிக்குழு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், அங்கன்வாடி மையத்தின் அருகே, திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது. மேலும், மையத்தின் அருகில் அப்பகுதி மக்கள் குப்பை கொட்டுகின்றனர்.

இதனால், அங்கன் வாடி மையம் முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. துர்நாற்றம் வீசுவதால், குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளளது. கழிவுநீர் கால்வாயில் இருந்து பாம்பு, பூரான், பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அங்கன்வாடியினுள் நுழைவதால், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே, பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி, புதிய அங்கன்வாடி மையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்."

Tags

Next Story