டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

தலைவன்வடலி கிராமத்தில் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.6 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், தலைவன்வடலி கிராமம் வடக்கு தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.6 இலட்சம் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தை டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின் படி தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை டிசிடபிள்யூ நிறுவனம் நிறுவியது. இந்த இயந்திர திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹமோனத் ஜோசன் திறந்து வைத்தார். விழாவில் டிசிடபிள்யூ நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story